ADDED : நவ 03, 2025 05:50 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் நடந்த அறச்சந்திப்பு கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு, திருக்குறள் கூறும் அறக்கருத்துகள், பிற நுால்கள் உரைக்கின்ற தனி மனித ஒழுக்கம் உள்ளிட்டவைகளை எடுத்துரைக்கும் வகையில், அறச்சந்திப்பு கூட்டம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ராம்குமார் வரவேற்றார். மாணவி கீர்த்தனா திருக்குறள் பெருமைகள் குறித்தும், அதன் கருத்துக்கள் குறித்தும் பேசினார். பேரவை செயலாளர் பரந்தாமன் நன்னெறிகளால் எப்படி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேசினார். திருக்குறள் ஒப்புவித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழாசிரியர் செல்வம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நன்றி கூறினார். மேலும், மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. பள்ளி செயலாளர் அருள்மொழிசெல்வன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

