தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சதுர்த்தி வழிபாடு

 சதுர்த்தி வழிபாடு

 சதுர்த்தி வழிபாடு


ADDED : மார் 23, 2026 08:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 08:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், முப்பிள்ளையாருக்கு நேற்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது.

மாலை 4:00 மணியளவில் சந்தனக்காப்பு அலங்காரத்தில், அருகம்புல் மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது.

இதேபோல, ஆற்றங்கரை சித்தி விநாயகர், காந்திநகர் நர்த்தன விநாயகர், தெற்குத்தெரு யாகசாலை விநாயகர், அய்யனார் கோவில் தெரு வழித்துணை விநாயகர், கடலுார் ரோடு விஜய விநாயகர், ரயில்வே குடியிருப்பு செல்வ விநாயகர், பெரியார் நகர் வினைதீர்த்த சித்தி விநாயகர் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us