/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சென்னை மியாட் சிறப்பு மருத்துவர் 25ல் கடலுார், புதுச்சேரியில் முகாம்

ADDED : அக் 23, 2024 06:12 AM
புதுச்சேரி : சென்னை மியாட் மருத்துவமனை டாக்டர், வரும், 25ம் தேதி கடலுார் மற்றும் புதுச்சேரியில், கல்லீரல் பிரச்னை தொடர்பான சிகிச்சைக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.
கடலுார், ஆற்காடு மருத்துவமனையில் வரும், 25ம் தேதி கல்லீரல் நோய்கள் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான பிரச்னைகளுக்கான ஆலோசனை முகாம் காலை 11:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடக்கிறது.
அன்றைய தினம் இந்த முகாம், புதுச்சேரியில் தி போஷ் மருத்துவமனையில் மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது. இதில் மியாட் மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுகி சுப்ரமணியம் ஆலோசனை வழங்க உள்ளார். முகாமில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கொழுப்பு கல்லீரல், சிரோசிஸ், மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய், ஹெபடைடிஸ் பி மற்றும் சி, இரைப்பை குடல் ரத்தப்போக்கு, கணைய பிரச்னைகள் குறித்து ஆலோசனைகள் பெறலாம்.
முன்பதிவிற்கு, 75400 44741 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.