ADDED : நவ 03, 2025 06:24 AM

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே பிராய்லர் கோழி ஏற்றி வந்த, மினி லாரி கவிழ்ந்த விபத்தில், 500 க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிப்பேட்டையை சேர்ந்தவர் ஜோதி மகன் விஜய், 21; டிரைவர். இவர் மினி லாரியில், ஒரு பாக்ஸில், 12 கோழிகள் வீதம், 90 பாக்ஸ்களில், 1080 கோழிகளை ஏற்றிக் கொண்டு, சேலத்தில் இருந்து பெரியப்பட்டு, பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள கோழி கடைகளுக்கு விற்பனைக்கு ஏற்றி வந்தார்.
நேற்று அதிகாலை 4:00 மணியளவில், புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு ஐந்து கண் மதகு பாலம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த, 500க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன.
தகவலறிந்த சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இறந்த கோழிகளை அள்ளி சென்றனர்.

