UPDATED : செப் 01, 2026 10:10 PM
ADDED : செப் 01, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: சிதம்பரம் ஏ.எஸ்.பி.,யாக சத்ரியா கவின் பொறுப்பேற்றார்.
சிதம்பரம் டி.எஸ்,பி., பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, ஐ.பி.எஸ்., பயிற்சி முடித்த சத்ரியா கவின் சிதம்பரம் ஏ.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார்.
அவருக்கு உட்கோட்ட இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகத்தை சேர்ந்த இவர், கடந்த 2016ம் ஆண்டு சென்னை சாந்தோமில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் பிளஸ் 2 முடித்தார். பின்னர் டில்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் எல்.எஸ்.ஆர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, யு.பி.எஸ்.சி., தேர்வில் அகில இந்திய அளவில் 169 வது இடத்தை பிடித்தார்.
இவர், தொடக்கத்தில் ஐ.ஆர்.எஸ்., அதிகாரியாக தேர்வாகி, பின்னர் ஐ.பி.எஸ்., தகுதி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
