/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் ஞானபிரகாச குளத்திற்கு தடுப்பு கட்டை அமைக்கும் பணிகள் தீவிரம்
/
சிதம்பரம் ஞானபிரகாச குளத்திற்கு தடுப்பு கட்டை அமைக்கும் பணிகள் தீவிரம்
சிதம்பரம் ஞானபிரகாச குளத்திற்கு தடுப்பு கட்டை அமைக்கும் பணிகள் தீவிரம்
சிதம்பரம் ஞானபிரகாச குளத்திற்கு தடுப்பு கட்டை அமைக்கும் பணிகள் தீவிரம்
ADDED : ஜன 20, 2024 06:18 AM

சிதம்பரத்தில், கோர்ட் உத்தரவுப்படி, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பொதுமக்களின் பயன்பாட்டு குளங்களை சீரமைக்க, சேர்மன் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி சிதம்பரம் பகுதியில் உள்ள 6 குளங்கள் ரூ. 8 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் , தெப்ப உற்சவம் நடைபெறும், ஞானபிரகாசம் குளமும் ஒன்று. 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், குளம் சீரமைக்கும் பணி துவங்கி நடந்து வந்தது. தற்போது இறுதி கட்ட பணிகள் முடிவடைந்து, குளத்தை சுற்றி, சில்வர் பைப் மூலம், தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும், குளத்தை சுற்றி, மண் அரிப்பு ஏற்படாத வகையில், பூந்தோட்டம் அமைத்து, நடைபாதை விரிவுபடுத்த, 27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
ஒப்பந்ததாரர் கிருஷ்ணமூர்த்தி இப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். நேற்று குளத்தில் நடைபெறும் பணிகளை, சிதம்பரம் நகராட்சி பொறியாளர் மகராஜன் பார்வையிட்டு, செய்ய வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். சமீபத்தில் பெய்த கன மழையால், கழிவு நீரால் சூழ்ந்திருந்த, ஞானபிரகாச குளம், தற்போது மழை நீரால் நிரம்பி அழகாக காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.