/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் மருத்துவக் கல்லுாரிக்கு விரைவில் விடிவுகாலம்: பன்னீர்செல்வம்
/
சிதம்பரம் மருத்துவக் கல்லுாரிக்கு விரைவில் விடிவுகாலம்: பன்னீர்செல்வம்
சிதம்பரம் மருத்துவக் கல்லுாரிக்கு விரைவில் விடிவுகாலம்: பன்னீர்செல்வம்
சிதம்பரம் மருத்துவக் கல்லுாரிக்கு விரைவில் விடிவுகாலம்: பன்னீர்செல்வம்
ADDED : பிப் 01, 2024 06:05 AM

சிதம்பரம்: சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு , விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என, அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சிதம்பரம், அண்ணாமலைநகரில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் திருப்பதி வரவேற்றார். சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று, ரூ.18 கோடி செலவில் அதிதீவிர அவசர சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
அப்போது, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், இங்குள்ள கடலுார் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டது. இங்கு, நோயாளிகள் வெளியே சென்று மருந்து வாங்கி வர சொல்லி சீட்டு எழுதி கொடுப்பவர்கள் மீது கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடிய விரைவில் இந்த மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு விடிவுகாலம் வந்து விடும் என, தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், எம்.எல்.ஏ.,க்கள் ஐயப்பன், சிந்தனைசெல்வன், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் பழனி, சப் கலெக்டர் ராஷ்மிராணி, ஏ.எஸ்.பி., ரகுபதி, டாக்டர் பாரி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜேம்ஸ்விஜயராகவன், கவுன்சிலர்கள் அப்புசந்திரசேகர், மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேஷ் நன்றி கூறினார்.