/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
15 இடங்களில் நிவாரண மையம் சிதம்பரம் நகராட்சி தயார்
/
15 இடங்களில் நிவாரண மையம் சிதம்பரம் நகராட்சி தயார்
15 இடங்களில் நிவாரண மையம் சிதம்பரம் நகராட்சி தயார்
15 இடங்களில் நிவாரண மையம் சிதம்பரம் நகராட்சி தயார்
ADDED : டிச 01, 2024 05:54 AM
சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் 15 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால், நகராட்சி பகுதியில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 1 மற்றும் 2 வது வார்டு பகுதி மக்கள் தங்குவதற்காக, சம்பந்தக்காரதெரு நகராட்சி பள்ளியிலும், 3, 4, வார்டு மக்களுக்காக, பைசல் மஹால் திருமண மண்டபம், 13வது வார்டு மக்களுக்காக வடக்கு வீதி நகராட்சி பள்ளி, 13வது வார்டு மக்களுக்காக ராமசாமி செட்டியார் பள்ளி, 21வது வார்டு மக்களுக்காக கொத்தங்குடி தெரு நகராட்சி பள்ளி, 28 வது வார்டு பகுதி மக்களுக்காக ராமகிருஷ்ணா பள்ளி, 33 வது வார்டு மக்களுக்காக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 15 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் தாழ்வான பகுதியாக உள்ளதால், அப்பகுதி மக்கள் தங்குவதற்கும், அவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்கும் ஏற்பாடுகளை, நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவில், கமிஷனர் மல்லிகா மற்றும் நகராட்சி ஊழியர்கள் செய்துள்ளனர்.

