/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வரி பாக்கி செலுத்தாததால் பாதாள சாக்கடை இணைப்பு 'கட்' சிதம்பரம் நகராட்சி அதிரடி

ADDED : பிப் 11, 2024 03:12 AM
சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சிக்கு, வரி பாக்கி செலுத்தாதால், 6 வணிக நிறுவனங்களின் பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
சிதம்பரம் நகராட்சியில் வரி பாக்கி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. சொத்து வரி ரூ. 6.53 கோடி, குடிநீர் வரி ரூ. 2.33 கோடி, வணிக நிறுவனங்கள் வாடகை பாக்கி ரூ. 1.37 கோடி, பாதாள சாக்கடை வரி ரூ. 1 கோடி, காலிமனை வரி ரூ. 36 லட்சம், தொழில் வரி ரூ. 56 லட்சம் என, மொத்தம் ரூ. 12.66 கோடிக்கு வரி பாக்கி உள்ளது.
இந்நிலையில் மார்ச் மாதத்திற்குள் வரிபாக்கியை வசூலிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு, வரி வசூலில் தீவிரம் காட்டி வருகின்றனர். நேற்று காலை நகராட்சி கமிஷனர் பிரபாகரன் தலைமையில், பொறியாளர் மகராஜன் மற்றும் ஊழியர்கள் ராம்குமார், நவீண், ரவிசங்கர் உள்ளிட்டோர் மேலவீதி மற்றும் தெற்கு வீதியில் உள்ள வணிக நிறுவனங்களில் நேரடியாக வரி வசூலில் ஈடுபட்டனர்.
அப்போது நீண்ட காலமாக வரி பாக்கி செலுத்தாத 6 வணிக நிறுவனங்களின் பாதாள சாக்கடை இணைப்பை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர். அப்போது, நீண்ட காலமாக வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பவர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாயும் எனவும், விரைந்து வரி பாக்கி செலுத்த வேண்டும் என, எச்சரிக்கப்பட்டனர்.