/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் ரயில் நிலையம் முற்றுகை: 44 பேர் கைது
/
சிதம்பரம் ரயில் நிலையம் முற்றுகை: 44 பேர் கைது
ADDED : ஏப் 13, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் ரயில் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய மனிதநேய ஜனநாயக கட்சியினர் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வக்ப் சட்டத்தை திரும்ப பெற கோரி மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹசேன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு சென்றனர்.
டி.எஸ்.பி., லாமேக் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பேரிகார்டு அமைத்து அவர்களை தடுத்தனர். இருப்பினும் போலீசாரின் தடையை மீறி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

