/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மைதானம் இருந்தும் வாய்ப்பில்லை சிதம்பரம் பள்ளி மாணவர்கள் புலம்பல்
/
மைதானம் இருந்தும் வாய்ப்பில்லை சிதம்பரம் பள்ளி மாணவர்கள் புலம்பல்
மைதானம் இருந்தும் வாய்ப்பில்லை சிதம்பரம் பள்ளி மாணவர்கள் புலம்பல்
மைதானம் இருந்தும் வாய்ப்பில்லை சிதம்பரம் பள்ளி மாணவர்கள் புலம்பல்
ADDED : அக் 10, 2024 03:54 AM
சிதம்பரம்: சிதம்பரத்தில், நுாற்றாண்டு பாரம்பரியமான ராமசாமி செட்டியார் அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளி உள்ளது. 1914 ம் ஆண்டு துவங்கிய இப்பள்ளியில், தற்போது 1200 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
தமிழக அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு திடல் பக்கமே அழைத்து செல்லாமல் பள்ளி நிர்வாகம் இருந்து வருவதாக, பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிதம்பரம் பஜார் தெருவில் பள்ளி அமைந்துள்ளது. விளையாட்டு வகுப்பின்போது, பள்ளியில் இருந்து 700 மீட்டர் துாரத்தில் அமைந்துள்ள இப்பள்ளி மைதானத்திற்கு மாணவர்கள் சென்று விளையாடி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக, விளையாட்டு திடலை மாணவர்கள் பார்ப்பதே குதிரை கொம்பிவிட்டது.
விளையாட்டு வகுப்பில், மாணவ, மாணவிகளை பள்ளி மைதாயனத்திற்கு அழைத்து செல்வதில்லை.
அதுமட்டுமின்றி, பள்ளி மைதானம் புதர் மண்டி காட்சியளிக்கிறது. அதனை சீர் செய்யவோ, மாணவர்களை விளையாட அழைத்து செல்லவோ, பள்ளி நிர்வாகம் தயாரில்லை. மாணவ, மாணவிகள் விளையாட்டிலும் ஆர்வம் வர வேண்டும் என இக்கால பெற்றோர் விரும்பும் நிலையில், பெற்றார் எதிர்பார்ப்பை பள்ளி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாணவர்கள் விளையாட தயாராக இருந்தும், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால், புலம்பி வருகின்றனர்.