/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் சப் கலெக்டருக்கு சிறந்த தேர்தல் அதிகாரி விருது
/
சிதம்பரம் சப் கலெக்டருக்கு சிறந்த தேர்தல் அதிகாரி விருது
சிதம்பரம் சப் கலெக்டருக்கு சிறந்த தேர்தல் அதிகாரி விருது
சிதம்பரம் சப் கலெக்டருக்கு சிறந்த தேர்தல் அதிகாரி விருது
ADDED : ஜன 28, 2025 05:22 AM

கடலுார் : சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில், சப் கலெக்டர் ரஷ்மி ராணி, சிறந்த தேர்தல் பதிவு அதிகாரிக்கான விருதை கவர்னர் ரவியிடம் பெற்றார். அதையடுத்து, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் நடத்தும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் சிறந்த ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது.
அதனடிப்படையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக சிறந்த தேர்தல் பதிவு அதிகாரி விருதை சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மி ராணி பெற்றுள்ளார் என, தெரிவித்தார்.