/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீதிமன்ற கட்டடங்களை முதன்மை நீதிபதி ஆய்வு
/
நீதிமன்ற கட்டடங்களை முதன்மை நீதிபதி ஆய்வு
ADDED : டிச 12, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: நீதிமன்ற கட்டடங்களை கடலுார் முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்தார்.
குறிஞ்சிப்பாடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீதிமன்ற கட்டடங்கள் மற்றும், நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்டடங்களை, கடலுார் முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி ஆய்வு செய்தார். அந்த பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என, முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.
மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் இரண்டாவது சிறப்பு மாவட்ட நீதிபதி பிரகாஷ், முதன்மை சார்பு நீதிபதி ராஜேஷ் கண்ணன், குற்ற வியல் நீதித்துறை நடுவர் சிவமதி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும், நீதிமன்ற அதிகாரிகள் ஆய் வின் போது உடனிருந்தனர்.

