/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவாமூரில் மக்களுடன் முதல்வர் அமைச்சர் கணேசன் துவக்கிவைப்பு
/
திருவாமூரில் மக்களுடன் முதல்வர் அமைச்சர் கணேசன் துவக்கிவைப்பு
திருவாமூரில் மக்களுடன் முதல்வர் அமைச்சர் கணேசன் துவக்கிவைப்பு
திருவாமூரில் மக்களுடன் முதல்வர் அமைச்சர் கணேசன் துவக்கிவைப்பு
ADDED : ஜூன் 20, 2025 12:30 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவாமூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மனுக்களை பெற்று அமைச்சர் கணேசன் நேற்று முகாமினை துவக்கி வைத்தார்.
பண்ருட்டி தாலுகாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று திருவாமூர், விசூர், காட்டுக்கூடலுார், பத்திரக்கோட்டை, காடாம்புலியூர் ஆகிய ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளிகளில் நடந்தது.
திருவாமூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு கலெக்டர் சிபிஆதித்யாசெந்தில்குமார் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.சபா ராஜேந்திரன், ஊரகவளர்ச்சி கூடுதல் கலெக்டர் சரண்யா, டி.ஆர்.ஒ.ராஜசேகர், முன்னாள் ஒன்றிய சேர்மன் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
முகாமில் தி.மு.க.ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், ஆர்.டி.ஒ.அபிநயா, உதவி இயக்குனர் ஷபனாஆஸ்மி, தாசில்தார் பிரகாஷ், பி.டி.ஒ.,க்கள் மீராகோமதி, பாபு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் அமைச்சர் கணேசன் முகாமினை துவக்கி வைத்து பேசியதாவது :
குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். உயர்ந்த சிந்தனைகளை வளர்க்க வேண்டும். இருகண்களில் ஒன்று கல்வி, மற்றொன்று மருத்துவம் என முதல்வர் தெரிவித்துள்ளார். பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் தமிழக முதல்வர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
உங்களுடைய பிரச்னை குறித்து மனு அளியுங்கள் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கணேசன் பேசினார்.