/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழர் வரலாற்றை உலகறிய செய்துள்ளார் முதல்வர்: வனத்துறை அமைச்சர் பொன்முடி பெருமிதம்
/
தமிழர் வரலாற்றை உலகறிய செய்துள்ளார் முதல்வர்: வனத்துறை அமைச்சர் பொன்முடி பெருமிதம்
தமிழர் வரலாற்றை உலகறிய செய்துள்ளார் முதல்வர்: வனத்துறை அமைச்சர் பொன்முடி பெருமிதம்
தமிழர் வரலாற்றை உலகறிய செய்துள்ளார் முதல்வர்: வனத்துறை அமைச்சர் பொன்முடி பெருமிதம்
ADDED : ஜன 27, 2025 06:16 AM

சிதம்பரம்; சிதம்பரம் நகர தி.மு.க., சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
சிதம்பரம் நகர தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பதினாறுகால் மண்டபத் தெருவில் நடந்தது. நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் இளங்கோவன் வரவேற்றார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். மாநில பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன் வரவேற்றனர். அமைச்சர்கள் பொன்முடி, பன்னீர்செல்வம், தலைமை பேச்சாளர் தமிழ்பிரியன் ஆகியோர் பேசினர்.
அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழகம், இரும்பு உலோகத்தின் முன்னோடி, என்பதை ஆதாரங்களோடு நிரூபித்து, தமிழர்கள் வரலாறு, உலக வரலாற்றுக்கு துவக்கமாக இருந்ததை, எடுத்துச் சொல்லியிருக்கிறார் நம் முதல்வர். இது தமிழனின் பெருமையை நிரூபிக்கின்ற ஒன்று. இதனை இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார், அதை செய்து காட்டியவர் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தார்.
பெரியாரைப் பற்றி தவறாக பேசுபவர்களை, நாம் விமர்சனம் செய்ய க்கூடாது. நேற்று கூட மாற்றுக் கட்சியில் இருந்து நமது கட்சியில் 3000 பேர் இணைந்தார்கள் இதுதான் நமக்கு கிடைக்க கூடிய வெற்றி என்றார்.
நகர துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

