/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
5 சார் பதிவாளர் அலுவலகங்கள் காணொலி மூலம் முதல்வர் திறப்பு
/
5 சார் பதிவாளர் அலுவலகங்கள் காணொலி மூலம் முதல்வர் திறப்பு
5 சார் பதிவாளர் அலுவலகங்கள் காணொலி மூலம் முதல்வர் திறப்பு
5 சார் பதிவாளர் அலுவலகங்கள் காணொலி மூலம் முதல்வர் திறப்பு
ADDED : நவ 28, 2024 07:13 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 5 சார் பதிவாளர் அலுவலக கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கடலுார் மாவட்டத்தில் பத்திரப்பதிவுத்துறை சார்பில் புதுப்பேட்டை, குள்ளஞ்சாவடி, பண்ருட்டி, நெல்லிக்குப்பம், மங்கலம்பேட்டை ஆகிய 5 இடங்களில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகங்களை நேற்று தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில், மின்னணு முறையில் முத்திரை அறை, பதிவேடுகள் வைப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கண்காணிப்பு கேமராக்கள், பொதுமக்களுக்கான கழிவறை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதள மேடையுடன் கூடிய கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் குத்துவிளக்கேற்றி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.