/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சில்வர் பீச்சில் நவீன வசதிகள் முதல்வர் காணொளியில் திறப்பு
/
சில்வர் பீச்சில் நவீன வசதிகள் முதல்வர் காணொளியில் திறப்பு
சில்வர் பீச்சில் நவீன வசதிகள் முதல்வர் காணொளியில் திறப்பு
சில்வர் பீச்சில் நவீன வசதிகள் முதல்வர் காணொளியில் திறப்பு
ADDED : மே 30, 2025 05:54 AM
கடலுார்: கடலுார் சில்வர் பீச் உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டதை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கடலுார் 2021ம் ஆண்டு பெருநகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சேவை பொதுமக்களை எளிதில் சென்றடையும் வகையில் சிறப்பு நிதியின் கீழ் 5 கோடி ரூபாய் மதிப்பில் கடலுார் முதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் மண்டலம் அலுவலகங்கள் கட்டப்பட்டது.
சில் பீச்சில் அதிநவீன பொழுதுபோக்கு மின்சாதனங்கள், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பூங்கா, செயற்கை நீருற்றுகள், ஓய்வெடுக்கும் பகுதிகள், குழந்தைகள் விளையாட்டு மையப் பகுதிகள், பெரியவர்களுக்கான திறந்தவெளி உடற்பயிற்சி மையம், நடைபாதை 4.98 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட சில்வர் பீச்சை மற்றும் மண்டல அலுவலகங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இதனையொட்டி சில்வர் பீச்சில் நடந்த விழாவில், அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர், துணைமேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் அனு உட்பட பலர் பங்கேற்றனர்.