ADDED : மார் 02, 2026 03:20 AM

அ நிறம் | அளவு
புவனகிரி: புவனகிரி அடுத்த வடக்குத்திட்டை கிராமத்தில் மத்திய ஒன்றிய தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடந்தது.
மத்திய ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள, அன்னதானம் வழங்கினார். கிளை செயலாளர் சாரங்கபாணி வரவேற்றார். மாவட்ட பிரதிநிதிகள் பாலமுருகன், பழனி, அவைத் தலைவர் மாறன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவானந்தம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயற்குழு ரவிச்சந்திரன், கிளை செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள் சண்முகம், நடராஜன், ஸ்ரீகாந்த், ராம்குமார், மணிகண்டன், மதிபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் அருண் நன்றி கூறினார்.
