ADDED : ஆக 24, 2025 06:50 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் முதல்வர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி நடந்தது.
ஜோசன் கைப்பந்து கழகம் மற்றும் ஆர்.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியன இணைந்து போட்டிக்கு ஏற்பாடு செயதிருந்தது.
நகராட்சி சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கினார். கைப்பந்து கழக செயலாளர் ஆலன்தீபக் வரவேற்றார்.
தி.மு.க., மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன், சிறந்த வீரர்களுக்கு பரிசு வழங்கினார்.
பள்ளி இயக்குனர்கள் பிரபு, விஷ்ணு, தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன், மாவட்ட பிரதிநிதி வேலு, விநாயகா மிஷன் கல்லுாரி விளையாட்டு இயக்குனர் ஓம்பிரகாஷ், இந்திய அணி பயிற்சியாளர் ஜெகதீஷ், வருமான வரித்துறை அதிகாரி கேசவன், இந்திய அணி வீரர் கோபால், பயிற்சியாளர் ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரி, கடலுார், சென்னை, ஈரோடு உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.

