/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
“முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டம் மாஜி படைவீரர்களுக்கு கடன் உதவி
/
“முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டம் மாஜி படைவீரர்களுக்கு கடன் உதவி
“முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டம் மாஜி படைவீரர்களுக்கு கடன் உதவி
“முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டம் மாஜி படைவீரர்களுக்கு கடன் உதவி
ADDED : ஜன 29, 2025 07:31 AM
கடலுார் : தாய் நாட்டிற்காக தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பை உறுதி செய்திடவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் மாஜி படைவீரர்கள், மாஜி படைவீரர்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படைப்பணியின்போது இறந்த மாஜி படைவீரர்களின் கைம்பெண்கள், தகுதியுள்ள மாஜி படைவீரர்களின் மகன்கள், மணமாகாத, கணவனை இழந்த மற்றும் கணவனை பிரிந்த மாஜி படைவீரர்களின் மகள்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் முன்னாள் படைவீரர்களுக்கு அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும் 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாஜி படைவீரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகும். மணமாகாத மகள்கள் மற்றும் கணவனை இழந்த கணவனை பிரிந்த மகள்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் கைம்பெண்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகும்.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதி ஏதும் இல்லை. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வருமான வரம்பு ஏதும் இல்லை. எனவே, இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் முன்னாள் படைவீரர்அவர்களைச் சார்ந்தவர்கள் மேலும் விபரங்களுக்கு இணைய முகவரியின் மூலம் htps://ex-servicemen-welfare.pixous.info -விலும் விண்ணப்பிக்கலாம்.