/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குருமா இருந்த பாத்திரத்தில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
/
குருமா இருந்த பாத்திரத்தில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
குருமா இருந்த பாத்திரத்தில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
குருமா இருந்த பாத்திரத்தில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
ADDED : நவ 24, 2025 12:34 AM
காட்டுமன்னார்கோவில்: ஹோட்டலில் வைத்திருந்த சூடான குருமாவில் தவறி விழுந்த, 3 வயது குழந்தை உயிரிழந்தது.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர் ஆனந்தன், 34; கூலி தொழிலாளி. இவரது குழந்தை சுஷாந்த், 3. இந்த குழந்தை, நவ., 18 மாலை, வீட்டின் முன் விளையாடியது. அப்போது அருகில் உள்ள ஹோட்டல் அடுப்பில் இருந்த சூடான பரோட்டா குருமாவில் விழுந்தது.
இதில், உடல் முழுதும் காயமடைந்த குழந்தையை, காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு குழந்தை இறந்தது. காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.