/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
/
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
ADDED : நவ 22, 2024 06:09 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் யசோதா முன்னிலை வகித்தார். இதில் கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிகாமணி ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர்.
இதில் குழந்தைகள் பாதுகாப்பு, பள்ளிகள், மகளிர் சுயஉதவிக்குழு கூட்டங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது, குறைந்த வயது திருமணங்களை தடுப்பது குறித்து பேசினர்.
இதில் பேரூராட்சி துணை தலைவர் முத்தமிழரசி பார்த்திபன், வி.ஏ.ஓ. பானுகோபன், சுகாதார ஆய்வாளர் அன்பரசன், பகுதி சுகாதார செவிலியர் பெரியஆச்சி, வார்டு கவுன்சிலர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.