/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆண், பெண் உறுப்புகளுடன் குழந்தை; மருத்துவ உதவி கோரி கலெக்டரிடம் மனு

ADDED : ஜன 21, 2025 07:34 AM
கடலுார்; ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன் பிறந்த குழந்தைக்கு, மருத்துவ உதவி வழங்கக்கோரி, பெற்றோர் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த அகரபுத்துாரை சேர்ந்த தம்பதி, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனு;
எங்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை, ஆண் உறுப்பு மற்றும் பெண் உறுப்புடன் பிறந்துள்ளது. இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
அப்போது, சிதம்பரம் அரசு மருத்துவமனை டாக்டர்கள், சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். தற்போது, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வருகிறோம். குழந்தைக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அதனால் எங்கள் குழந்தைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு போதிய நிதி உதவி செய்ய வேண்டும்.
மேலும், உரிய சிகிச்சை அளிக்க அரசு டாக்டர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். குழந்தையை வளர்க்க உதவி மற்றும் மருத்துவ ரீதியான நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.