ADDED : நவ 13, 2024 09:10 PM

அ நிறம் | அளவு
கடலுார்; கடலுாரில் குளோபல் நிறுவனம் மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் குழந்தைகள் தின விழா நடந்தது.
மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் பாபு முன்னிலை வகித்தார். மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி நடத்தி வரும் குளோபல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கோபால் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பயிற்சி கலெக்டர் ஆகாஷ், ஓவியம், கட்டுரை, பேச்சு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
செயின்ட் ஜோப் பள்ளி முதல்வர் நசியான் கிரகோரி, மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் இளங்கோவன் வாழ்த்திப் பேசினர்.
நிறுவனத் தலைவர் குமுதம் நன்றி கூறினார்.
