/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் குழந்தைகள் தினவிழா
/
ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் குழந்தைகள் தினவிழா
ADDED : நவ 19, 2024 07:05 AM

விருத்தாசலம்; விருத்தாசலம், ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா மற்றும் முதல் பருவ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் விசுவநாதன் தலைமை தாங்கி, முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் சிவகாமி வரவேற்றார். ஓய்வு பெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுசீலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும், இதில், நேருவின் வாழ்க்கை வரலாறு குறித்து, பேச்சு, ஓவிய போட்டி நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பரிசு வழங் கப்பட்டது. ஆசிரியை பாரதி நன்றி கூறினார்.