/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது
/
பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது
ADDED : அக் 07, 2024 07:04 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சி ராமலிங்கம் மனைவி கீதா, 25. விருத்தாசலம் நீதிமன்றத்தில் முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர். விடுமுறை நாளான நேற்று, தனது அக்காவின் பெட்டிக்கடையில் வியாபாரம் செய்துள்ளார்.
அப்போது, விஜயமாநகரம், புதுஇளவரசன்பட்டு மணிவாசகன் மகன் மதிபாலன், 24, என்பவர், தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளார். பின்னர், அழகாய் இருக்கிறாய் எனக்கூறி தவறாக நடக்க முயன்றுள்ளார். கீதா சப்தம் போட்டதால் கத்தியால் குத்தி விடுவேன் என மிரட்டியுள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கீதா புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் வழக்குப் பதிந்து, மதிபாலனை கைது செய்தனர்.

