/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலைமகள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
/
கலைமகள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
ADDED : டிச 24, 2024 07:49 AM

சிதம்பரம்; காட்டுமன்னார்கோவில் கலைமகள் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
காட்டுமன்னார்கோயில் கலைமகள் மெட்ரிக் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு கல்விக்குழும நிறுவனர் முத்துக்குமரன், நிர்வாக இயக்குநர் நவநீதம் தலைமை தாங்கினர். முதல்வர் சஞ்சய்காந்தி வரவேற்றார். தாளாளர் பரணிதரன், செயலாளர் பாலறாவாயன் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி பேராயர் நிரஞ்சன்ராஜ்,. ஜாய் சம்பந்தம் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினார். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி நடனமாடி மகிழ்வித்தார். மழலையர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி துணை முதல்வர் செல்வக்குமார் நன்றி கூறினார்.