தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

 கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

 கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்


ADDED : டிச 22, 2025 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளி தாளாளர் செங்கோல் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் புனிதவள்ளி, செயல் இயக்குனர் சாலை கனகதாரன், லயன்ஸ் மற்றும் நாளா கிளப் தலைவர்கள் குமரேசன், அருள்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை ரோஸ் ஏஞ்சல் வரவேற்றார்.

இந்திய அரசு பாதுகாப்பு துறை இயக்குனர் சாலை மாறான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஸ்ரீ புத்துார் பங்குத்தந்தை ராயல் பிரிட்டோ கிறிஸ்து குடிலை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் கிறிஸ்து பிறப்பு குறித்து நடித்து காண்பித்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடந்தது.

முன்னாள் நிர்வாக அலுவலர் சுப்ரமணியன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியர் எட்வின்பால் பெர்னாட்ஷா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us