/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஞ்சா புழக்கம் தாராளம் மா.கம்யூ., கண்டனம்
/
கஞ்சா புழக்கம் தாராளம் மா.கம்யூ., கண்டனம்
ADDED : அக் 29, 2024 07:05 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் நடந்த மா.கம்யூ., வட்ட மாநாட்டில், அரசு மருத் துவக்கல்லுாரி அமைத்திட வலியுறுத்தப் பட்டது.
மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு கருப்பையன், மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், சி.ஐ.டி.யூ., ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் கலைச்செல்வன் வரவேற்றார்.
கூட்டத்தில், மனைப்பட்டா கேட்ட அனைவருக்கும் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். விருத்தாசலத்தில் மருத்துவக் கல்லுாரி அமைக்க வேண்டும். அரசு பெண்கள் கல்லுாரி அமைக்க வேண்டும்.
மேலும், விருத்தாசலத்தில் தாராளமாக புழங்கும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை தடுப்பது உட்டபட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

