/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில் மறியல் நடத்த நகர மா.கம்யூ., தீர்மானம்
/
ரயில் மறியல் நடத்த நகர மா.கம்யூ., தீர்மானம்
ADDED : அக் 05, 2024 04:22 AM

பண்ருட்டி : பண்ருட்டி நகர மா.கம்யூ., 4 வது நகர மாநாடு நேற்று நடந்தது.
மாநாட்டை மாவட்ட செயலாளர் மாதவன் துவக்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை நகர செயலாளர் உத்தராபதி படித்தார். செயற்குழு உறுப்பினர் சுப்புராயன் வாழ்த்தி பேசினார். இதில் 11 பேர் கொண்ட புதிய நகர குழு தேர்வு செய்யப்பட்டனர்.
நகர செயலாளராக தேவராஜ் தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டில் விக்கிரவாண்டி- சேத்தியாதோப்பு தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி வரும் 22 ம்தேதி நான்குமுனை சந்திப்பில் மறியல் போராட்டம் நடத்துவது.
பண்ருட்டி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி டிசம்பர் மாதத்தில் ரயில் மறியல் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றினர்.