/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் அரசு கல்லுாரியில் மாணவர்களுக்குள் மோதல்
/
கடலுார் அரசு கல்லுாரியில் மாணவர்களுக்குள் மோதல்
ADDED : பிப் 02, 2024 03:32 AM
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில், நேற்று 'நான் முதல்வன்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கணிதம் மற்றும் இயற்பியல் துறை மாணவர்கள் பங்கேற்க அமர்ந்திருந்தனர். இந்நிலையில் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது. அதனால் கல்லுாரி இடைவேளை நேரத்தில் மேடையில் மொபைல் போனில் பாடல் போட்டு, நடனம் ஆடினர்.
அப்போது, தேவனாம்பட்டிணத்தை சேர்ந்த கணித துறை மூன்றாமாண்டு மாணவர் ஒருவர், பாடலுக்கு ஒன்ஸ்மோர் கேட்டு நாற்காலியை துாக்கி போட்டார். அந்த நாற்காலி, கூட்டத்தில் நின்றிருந்த கடலுார் முதுநகரை சேர்ந்த இயற்பியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் மீது விழுந்தது.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணிதத்துறை மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கியதில் படுகாயமடைந்த இயற்பியல் துறை மாணவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேவனாம்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

