/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் முன்னிலையில் இரு தரப்பினர் மோதல்; பண்ருட்டி அருகே 8 பேர் காயம்: போலீஸ் குவிப்பு
/
போலீஸ் முன்னிலையில் இரு தரப்பினர் மோதல்; பண்ருட்டி அருகே 8 பேர் காயம்: போலீஸ் குவிப்பு
போலீஸ் முன்னிலையில் இரு தரப்பினர் மோதல்; பண்ருட்டி அருகே 8 பேர் காயம்: போலீஸ் குவிப்பு
போலீஸ் முன்னிலையில் இரு தரப்பினர் மோதல்; பண்ருட்டி அருகே 8 பேர் காயம்: போலீஸ் குவிப்பு
ADDED : செப் 29, 2024 06:29 AM

பண்ருட்டி : பண்ருட்டி அருகே போலீஸ் முன்னிலையில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 8 பேர் படுகாயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தேவகிஆடலரசு. தி.மு.க.,வை சேர்ந்த இவர், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில் துணை சேர்மனாக உள்ளார்.
இவருக்கும், அதே பகுதி அ.தி.மு.க., நிர்வாகி ராஜமணிகண்டன், பிரதாப் ஆகியோருக்கும் இடையே, அந்த ஊர் ஐயனார் கோவில் நிர்வாகம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் உள்ளது.
நேற்று காலை இரு தரப்பினருக்கும் கோவில் நிலம் குறித்த பிரச்னையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
புகாரின்பேரில், நேற்று மாலை 7:00 மணியளவில் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் பலராமன் தலைமையில் போலீசார், காடாம்புலியூர் சென்று இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, போலீசார் முன்னிலையில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் ஆடலரசு தரப்பில் மணிமாறன், 46; லோகேஸ்வரன், 20; வினோத், 35; சஞ்சய், 25; நெடுமாறன், 56; ஆகிய 5 பேர், ராஜமணிகண்டன் தரப்பில் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் 8 பேரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இரவு 9:00 மணியளவில், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சென்ற ஆடலரசு தரப்பினர், தங்கள் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டதால், போலீசார் சமாதானப்படுத்தி, அங்கிருந்த 8 பேரையும் மேல் சிகிச்சைக்கு கடலுாருக்கு அனுப்பி வைத்தனர். போராட்டம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் பாதித்தனர்.
மோதல் தொடர்பாக இரு தரப்பினர் கொடுத்து புகாரில், காடாம்புலியூர் போலீசார் விசாரிக்கின்றனர். ஊரில் அசம்பாவிதத்தை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.