/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: கடலுாரில் கலெக்டர் ஆய்வு
/
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: கடலுாரில் கலெக்டர் ஆய்வு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: கடலுாரில் கலெக்டர் ஆய்வு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: கடலுாரில் கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 29, 2025 04:20 AM

கடலுார்: கடலுார் மாநகரில் நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முழுதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று துவங்கியது. கடலுார் மாவட்டத்தில் 437 பள்ளிகளில் இருந்து 17,384 மாணவர்கள், 15,570 மாணவிகள் என மொத்தம் 32,954 பேர் தேர்வு எழுது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலுார் மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதியதை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டார். தொடர்ந்து, வேணுகோபாலபுரம் வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வை ஆய்வு செய்தார்.
பின், அவர், நிருபர்களிடம் கூறுகையில், 'ஒவ்வொரு தேர்வு மையங்களிலும், மாணவர்களின் நலன் கருதி குடிநீர் வசதி, கழிவறை, தடையில்லா மின்சார வசதி, காவல்துறையினரின் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு இத்தேர்வானது தங்களுடைய எதிர்கால வாழ்வினை தீர்மானிக்கும் என்பதால் கவனமுடன் வினாத்தாள்களை படித்து நன்றாக தேர்வு எழுத வேண்டும்.
பொதுத்தேர்வினை எவ்வித அச்சமும் இன்றி, சிந்தனைகளை சிதற விடாமல் எழுதி அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்' என்றார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கரன் உட்பட பலர் உடனிருந்தனர்.