/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வகுப்பறை கட்டடங்கள்; அமைச்சர் பன்னீர்செல்வம் திறப்பு
/
வகுப்பறை கட்டடங்கள்; அமைச்சர் பன்னீர்செல்வம் திறப்பு
வகுப்பறை கட்டடங்கள்; அமைச்சர் பன்னீர்செல்வம் திறப்பு
வகுப்பறை கட்டடங்கள்; அமைச்சர் பன்னீர்செல்வம் திறப்பு
ADDED : செப் 25, 2024 11:02 PM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் ரூ. 21 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் மாவட்ட கனிம வள நிதியின் கீழ் ரூ. 38 லட்சம் செலவில், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டுறவுசங்கங்களின் பதிவாளர் சுப்பையா, கூடுதல் கலெக்டர் சரண்யா, சப் கலெக்டர் ராஷ்மி ராணி, எம்.எல்.ஏ.,சிந்தனைச்செல்வன், சேர்மன் தேன்மொழி சங்கர், துணை சேர்மன் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தனர்.
பள்ளி கட்டடங்களை அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பெரியகருப்பன் திறந்து வைத்தனர்.
வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், இங்கு, 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி வளர்ச்சிக்கு தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.
விழாவில், ஒன்றிய செயலாளர்கள் முத்துபெருமாள், கலையரசன், மாவட்ட பிரதிநிதி சங்கர், சேர்மன் கருணாநிதி,செயல் அலுவலர் மயில்வாகணன், ஒன்றிய அவைத் தலைவர் ராஜராமன், வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், முன்னாள் துணை சேர்மன் செழியன், தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சையதுன்னிசா சாலிஹ் மரைக்காயர், கவுன்சிலர்கள் ராஜேஸ்வரிவேல்முருகன், ஜாபர் ஷரீப், தையல்நாயகி கணேசமூர்த்தி, பி.டி.ஓ., சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.