/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் பிறந்த நாள் அமைச்சர் அறிவுறுத்தல்
/
முதல்வர் பிறந்த நாள் அமைச்சர் அறிவுறுத்தல்
ADDED : மார் 01, 2026 05:20 AM

சிறுபாக்கம்: கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட பகுதியில் முதல்வரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அமைச்சர் கணேசன் அறிவுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதேபோல், கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்டத்தை சேர்ந்த நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, கிளை, வார்டுகள் தோறும் மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.
இதில், மேற்கு மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க் கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, பேரூர், ஒன்றிய செயலர்கள், அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட அனைவரும் தவறாமல் ப ங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

