/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் கோப்பை போட்டி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு
/
முதல்வர் கோப்பை போட்டி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு
முதல்வர் கோப்பை போட்டி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு
முதல்வர் கோப்பை போட்டி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு
ADDED : செப் 21, 2024 06:41 AM

கடலுார்: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர்.
கடலுார் அண்ணா விளையாட்டு மைதானத்தில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இப்போட்டியில், பங்கேற்க 12 ஆயிரத்து 537 பள்ளி மாணவ, மாணவியர், கல்லுாரி மாணவ, மாணவியர் 6033 பேர், மாற்றுத்திறனாளிகள் 788 பேர், அரசுத்துறைகளில் பணியாற்றுவோர் 722 பேர், பொதுப் பிரிவினர் 2002 பேர் என மொத்தம் 22 ஆயிரத்து 82 பேர் பதிவு செய்துள்ளனர்.
இதில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் முடிவடைந்தது. இதை தொடர்ந்து, நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. தடகளம், இதில், இறகுபந்து, கபடி, வாலிபால் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர்.