/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சி.என்.பாளையம்-கீழ்மாம்பட்டு சாலை கந்தல்: மக்கள் அவதி
/
சி.என்.பாளையம்-கீழ்மாம்பட்டு சாலை கந்தல்: மக்கள் அவதி
சி.என்.பாளையம்-கீழ்மாம்பட்டு சாலை கந்தல்: மக்கள் அவதி
சி.என்.பாளையம்-கீழ்மாம்பட்டு சாலை கந்தல்: மக்கள் அவதி
ADDED : ஏப் 07, 2025 05:54 AM

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் புத்திரன்குப்பத்திலிருந்து கீழ்மாம்பட்டு செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் புத்திரன்குப்பத்தில் இருந்து கீழ்மாம்பட்டு, புதுப்பாளையம், சாத்திப்பட்டு, காடாம்புலியூர் செல்லும் சாலை உள்ளது.
இச்சாலை வழியாக தான் அதிகளவில் பைக்கில் செல்கின்றனர். விவசாயத்திற்கு தேவையான பொருட்களும் இந்த வழியாக வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.
சாலையில் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
வாகனங்கள் சேதமடைவதால் மாற்று வழியாக செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி, கடலுார் ஆகிய இரு ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் சாலை வருவதால் அதிகாரிகள் போட்டி போட்டிக் கொண்டு சாலையை சரி செய்வது இல்லை. இனியாவது சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

