ADDED : பிப் 15, 2024 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த கூ.தென்பாதி ஊராட்சி ஒன்றிய உதவிபெறும் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் ஆதிவராகன் தலைமை தாங்கினார்.
தலைமை ஆசிரியர் இந்திரா, நகர் நலச்சங்க தலைவர் தர்மலிங்கம், கீரப்பாளையம் வட்டார ஆசிரியர் பயிற்றுனர்கள் கோபி, தசோரதரன் மற்றும் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் அங்கயற்கண்ணி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர்கள் மணிவாசகன், கலைச்செல்வி வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.