/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒலிம்பிக் போட்டிக்கு வீராங்கனைகளை உருவாக்குதே இலக்கு: பயிற்சியாளர் சிவக்குமார் நம்பிக்கை
/
ஒலிம்பிக் போட்டிக்கு வீராங்கனைகளை உருவாக்குதே இலக்கு: பயிற்சியாளர் சிவக்குமார் நம்பிக்கை
ஒலிம்பிக் போட்டிக்கு வீராங்கனைகளை உருவாக்குதே இலக்கு: பயிற்சியாளர் சிவக்குமார் நம்பிக்கை
ஒலிம்பிக் போட்டிக்கு வீராங்கனைகளை உருவாக்குதே இலக்கு: பயிற்சியாளர் சிவக்குமார் நம்பிக்கை
ADDED : நவ 20, 2025 05:50 AM

கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 50; தற்போது அண்ணாமலை பல்கலையில் உடற்கல்வித்துறையின் தலைவராகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார்.
கிராமத்து மாணவராக இருந்து, நெய்வேலியில் உள்ள தமிழக அரசு விளையாட்டு பள்ளியில், பள்ளி படிப்பை முடித்து, விளையாட்டின் மீது உள்ள ஆர்வத்தினால், அண்ணாமலை பல்கலையில் உடற்கல்வித்துறையில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
கடந்த, 2000 ம் ஆண்டு அண்ணாமலை பல்கலையில், உடற்கல்வி துறையில் விரிவுரையாளராக பணியை துவங்கினார். கிரிக்கெட் போட்டியில், 16 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில், தமிழக அணிக்காக விளையாடினார்.
கிரிக்கெட்டில் உள்ள அதே ஆர்வம், கால்பந்திலும் திரும்பியதோடு, சிறந்த வீரராக உருவாகி, அண்ணாமலை பல்கலையில் கடந்த, 2012 ம் ஆண்டு, முதல் பெண்கள் கால்பந்து அணியை உருவாக்கி, பல சாதனைகளை புரிந்து வருகிறார்.
பெண்கள் கால்பந்து அணியின் பயிற்றுனராக, பல வீராங்கனைகளை உருவாக்கி, இந்திய அளவில் சாதனைகள் புரிந்துள்ளார்.
அண்ணாமலை பல்கலை பெண்கள் கால்பந்து அணி, அகில இந்திய அளவிலான, பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில், 2 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது.
மேலும் இரு முறை 2 ம் இடமும், ஆறு முறை, 3ம் இடத்தையும் பெற்று, தொடர்ந்து அகில இந்திய அளவிலான போட்டிகளில் பெரும் சாதனை புரிந்து வருகிறது.
கேலோ இந்தியா என்று அழைக்கப்படும் இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில், இரு முறை சாம்பியன் பட்டத்தை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது, இவர் பயிற்சி அளித்த பெண்கள் அணி.
இவரிடம் பயிற்சி பெற்ற சவுமியா, கார்த்திகா, சந்தியா, என்.வி. சந்தியா, மாளவிகா, ஐஸ்வர்யா, அர்ச்சனா ஆகிய வீராங்கனைகள் இந்திய கால்பந்து அணியில் பங்கு பெற்று விளையாடியுள்ளனர். தற்போதும், 3 வீராங்கனைகள் இந்திய அணியில் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.
அண்ணாமலை பல்கலை கால்பந்து பெண்கள் அணியில் இடம் பெற்ற, 23 வீராங்கனைகள் அரசு பணியிடங்களை பெற்றுள்ளனர்.
நடப்பாண்டிற்கான சீனியர் பிரிவிற்கான, தேசிய அளவிலான, கால்பந்து போட்டியில் அண்ணாமலை பல்கலை வீராங்கனைகள் தக்க்ஷனா, தாமரைச்செல்வி, அகிலா ஆகியோர் பங்கு பெற்று, விளையாடி தமிழக அணியை மூன்றாம் இடம் பெற செய்துள்ளனர். அவர்களும் தற்போது அரசு பணிக்கான, ஆணை பெற காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பயிற்சியாளர் சிவக்குமார் கூறியதாவது:
அண்ணாமலைப் பல்கலையில், பயிற்சி பெறும், பெரும்பாலான வீராங்கனைகள், உடற்கல்வித்துறையில் படித்துக்கொண்டே பயிற்சியும் பெறுகின்றனர். இதில் கடும் பயிற்சி எடுத்து, விடா முயற்சியடன் தடம் பதிக்கின்றனர்.
ஆர்வத்துடன் பயிற்சி பெறும் அனைவருக்கும் ஆரோக்கியமான உடலும் உள்ளமும் மட்டும் அல்லாமல் அரசு வேலை வாய்ப்பும் காத்துக்கொண்டிருக்கின்றது.
தெற்காசிய விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய கால்பந்து அணியில், அண்ணாமலை பல்கலை வீராங்கனைகள் பங்கு பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே இலக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.

