தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் மாணவர்கள் சாதனை

கடலுார் மாணவர்கள் சாதனை

கடலுார் மாணவர்கள் சாதனை


ADDED : செப் 18, 2024 09:49 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2024 09:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: கிருஷ்ணகிரி, ஒசூர் அதியமான் பொறியியல் கல்லுாரியில், 10வது இளையோருக்கான மாநில அளவிலான சாப்ட் பால் போட்டிகள் நடந்தது. சென்னை, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலுார், கடலுார் உட்பட 18 மாவட்டங்களை சேர்ந்த 450 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

அதில், மாணவர்களுக்கான போட்டியில் சேலம் முதலிடம், கிருஷ்ணகிரி இரண்டாமிடம், திருச்சி மூன்றாமிடம் பெற்றது. மாணவிகளுக்கான போட்டியில் கிருஷ்ணகிரி முதலிடம், திருச்சி இரண்டாமிடம், செங்கல்பட்டு மூன்றாமிடம் பெற்றது.

இதில், கடலுார் மாவட்டம் சார்பில் 19 மாணவர்கள் பங்கேற்றனர். சங்க தலைவர் மாதவன், செயலாளர் நவராஜா, துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினர். சாப்ட் பால் சங்க மாவட்ட செயலாளர் ராஜராஜசோழன், துணை செயலாளர் மனோகர் ஆகியோர் அழைத்துச் சென்றிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us