/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவிகளின் தனிப்பட்ட தகவல்கள் சேகரிப்பு எச்சரிக்கையாக இருக்க கலெக்டர் அட்வைஸ்

ADDED : ஆக 15, 2025 03:22 AM
கடலுார்: பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகள் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் செய்திக்குறிப்பில்:
கடலுார் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்கள், முகவரிகள், தொலைபேசி எண் போன்வற்றை சைபர் கிரைம் குற்றவாளிகள் திருடப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனால் உங்களுக்கு தொடர்பு இல்லாத யாரேனும் தொலைபேசி எண், இ.மெயில், மற்றும் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்தி மூலமாக தொடர்பு கொண்டு, அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் கல்வி உதவித் தொகை வழங்குவதாக கூறி, உங்களுடைய வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் சேகரித்தால் மாணவ, மாணவிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
கல்வி உதவித்தொகை பெற, பதிவு கட்டணம் அல்லது செயல்முறை கட்டணம் செலுத்த வேண்டும் என கூறினாலும் ஏமாற வேண்டாம்.இது போன்ற முறைகேட்டில் ஈடுப்படுபவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து உடன் கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் துறை சைபர் கிரைம் பிரிவு, மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
மேலும் 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.