/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
/
பண்ருட்டி அரசு பள்ளிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : பிப் 06, 2025 11:22 PM

பண்ருட்டி: பண்ருட்டி பகுதி அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்டத்தில் பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் அரையாண்டு தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசுப் பள்ளிகளில் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்து வருகிறார்.
அதன்படி, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். தேர்ச்சி சதவீதம் குறைந்த மாணவ, மாணவிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, கற்றல் திறனை மேம்படுத்த வேண்டுமென, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
முதன்மைக் கல்வி அதிகாரி எல்லப்பன், விருத்தாசலம் மாவட்ட கல்வி அதிகாரி துரைபாண்டியன், தலைமை ஆசிரியர் செல்வம், என்.சி.சி.,அலுவலர் ராஜா உடனிருந்தனர். இதேப் போன்று சிறுகிராமம், பெரியகாட்டுப்பாளையம், மருங்கூர் உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

