/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்களுடன் அமர்ந்து கலெக்டர் கலந்துரையாடல்
/
மாணவர்களுடன் அமர்ந்து கலெக்டர் கலந்துரையாடல்
ADDED : அக் 27, 2024 06:28 AM

புவனகிரி: புவனகிரியில் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' சிறப்பு திட்டத்தின் கீழ் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அரசு மாணவர் விடுதியில், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார்.
'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் புவனகிரி தாலுகாவில் நேற்று முன்தினம் அரசின் நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து களஆய்வை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார்துவக்கினார்.
அப்போது சிதம்பரம் சப்கலெக்டர் ராஷ்மிராணி, புவனகிரி தாசில்தார் தனபதி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். நேற்று முன்தினம் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்ற பின், அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இரவு புவனகிரியில் இயங்கும் அரசு மாணவர் விடுதியில், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார். அதன் பின், புவனகிரி போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது சப் இன்ஸ்பெக்டர் லெனின் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.
இரவு தாலுகா அலுவலகத்தில் தங்கினார். நேற்று காலை தெற்குத்திட்டையில் பால் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார்.