/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் 1,611 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் கடலுாரில் கலெக்டர் துவக்கி வைப்பு
/
மாவட்டத்தில் 1,611 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் கடலுாரில் கலெக்டர் துவக்கி வைப்பு
மாவட்டத்தில் 1,611 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் கடலுாரில் கலெக்டர் துவக்கி வைப்பு
மாவட்டத்தில் 1,611 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் கடலுாரில் கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : மார் 04, 2024 12:27 AM

கடலுார் : கடலுாரில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். மாவட்டம் முழுதும் 1,611 மையங்களில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.
மக்கள் நலவாழ்வு மற்றும் சுகாதாரத் துறை சார்பில், கடலுார் மாவட்டத் தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்ததது.
கடலுார் பஸ் நிலைய முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார்.
பின், முகாம் குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்கொடியிடம் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், தாய்சேய் நல அலுவலர் சசிகலா மற்றும் அரசு மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின், கலெக்டர் கூறியதாவது;
கடலுார் மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை, பள்ளிகள், சத்துணவு மையம், அங்கன்வாடி, பஸ் நிலையம், ரயில் நிலையம், சத்திரம், தேசிய நெடுஞ்சாலைகள் என 1,611 மையங்கள் அமைத்து போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது.
மேலும் மாவட்ட எல்லை பகுதி, குடிசைப் பகுதிகள், இடம் பெயர்ந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுள்ளன.
கடலுார் மாவட்டத்தில் உள்ள 6 வயதிற்கு உட்பட்ட 2,08,903 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது.
சுகாதாரத் துறையுடன் இணைந்து பள்ளி கல்வித் துறை, ஊட்டச்சத்துத் துறை, சமூகநலத்துறை, வருவாய்த்துறை, இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 6,444 பணியாளர்கள், 196 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுப்பட்டனர்.
விடுப்பட்ட குழந்தைகளுக்கு, இரு நாட்கள் பின், பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று சொட்டு மருந்து வழங்குவர்.
பெற்றோர்கள் தங்களது 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

