ADDED : அக் 17, 2024 04:53 AM

அ நிறம் | அளவு
கிள்ளை: பருவ மழை முன்னெச்சரிக்கையாக, கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட கடற்கரையோர மீனவ கிராமங்கள், புயல் பாதுகாப்பு மையங்களை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, எம்.ஜி.ஆர்., திட்டில் தடுப்பு சுவர் விரிவுபடுத்துவது, கிள்ளை பகுதியில் சிமெண்ட் சாலை அமைப்பது, கழிவு நீர் உறுஞ்சிம் இன்ஞ்சின் வாங்குவது, முழுக்குத்துறை கிராமத்திற்கு சுடுகாடு அமைப்பது, பேரூராட்சி மூலம் படகு வாங்குவது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
அவருடன், துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன், செயல் அலுவலர் மருதுபாண்டியன், தலைமை எழுத்தர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
