/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டையில் கலெக்டர் ஆய்வு
/
பரங்கிப்பேட்டையில் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 27, 2024 04:55 AM

பரங்கிப்பேட்டை : உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில், பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை நேற்று கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்ட பசுமை மீட்பு பூங்காவில், உரம் உற்பத்தி செய்வது குறித்தும், கெடிமரத்தெருவில் ரூ. 35 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டடப்பணி, முஸ்தபா கார்டனில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 36 லட்சம் மதிப்பில் புதிய சாலை பணி, ரேவ் மெயின்ரோட்டில் வீடு வீடாக குப்பைகள் தரம் பிரித்து வாங்கும் பணியை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் வெங்கடேசன், செயல் அலுவலர் மயில்வாகணன், துணை சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், சுகாதார ஆய்வாளர் ஜோதி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.