/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி பகுதியில் கலெக்டர் ஆய்வு
/
புவனகிரி பகுதியில் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 26, 2024 06:49 AM

புவனகிரி: 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் வாயிலாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் புவனகிரி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் அரசின் நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிலம்பிமங்கலம் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்தும், வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடையினை பதிவுசெய்யும் கோப்புகள் குறித்தும் மற்றும் அம்மையத்தில் பராமரிக்கப்படும் குழந்தைகளின் வருகை பதிவேட்டினையும் ஆய்வு செய்தார்.
புதுச்சத்திரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவர் பிரிவு, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பதிவுகளில் ஆய்வு மேற்கொண்டார்.
வில்லியநல்லுார் ஊராட்சியில் 54.75 லட்சம் ரூபாய் மதிப்பில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு செய்தார்.
புதுச்சத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டறவு சங்கத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பு.முட்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் இடை பருவ தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு ஆகியவற்றில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து அனைத்து பாடத்திட்டம் வாரியாக ஆய்வு செய்தார்.