/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடற்கரையில் மேம்பாட்டு பணிகள் கடலுாரில் கலெக்டர் ஆய்வு
/
கடற்கரையில் மேம்பாட்டு பணிகள் கடலுாரில் கலெக்டர் ஆய்வு
கடற்கரையில் மேம்பாட்டு பணிகள் கடலுாரில் கலெக்டர் ஆய்வு
கடற்கரையில் மேம்பாட்டு பணிகள் கடலுாரில் கலெக்டர் ஆய்வு
ADDED : மே 22, 2025 11:37 PM

கடலுார்: சிங்காரத்தோப்பு கடற்கரை பகுதிகளில் உட்கட்டமைப்பு பணிகள் ஏற்படுத்துவது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
கடலுார் அருகே சிங்காரத்தோப்பு கடற்கரை பகுதிகளில் சுற்றுலாத் துறையினை மேம்படுத்தும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுப் பணிகள் ஏற்படுத்துவது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது:
தேவனாம்பட்டிணம் வெள்ளிக் கடற்கரைக்கு உள்ளூர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் வகையில் வெள்ளிக் கடற்கரையினை மேம்படுத்த அதிநவீன பொழுதுபோக்கு மின்சாதனங்கள் அமைத்தல், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பூங்கா, செயற்கை நீருற்றுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர் நடவடிக்கையாக, சுனாமியால் சேதமடைந்த பழைய கலங்கரை விளக்கம் முதல் சிங்காரத் தோப்பு வரை கடற்கரையை சுற்றியுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலங்கரை விளக்கத்தை புதுக்பொலிவுடன் சீரமைத்து பொதுமக்கள் நடந்து சென்று கண்டுகளிக்கும் வகையில் பார்வையிட ஏதுவாக இருபுறமும் சாலைகள் அமைத்து, மரங்கள் நட்டு மின்விளக்கு வசதிகளுடன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பணிகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வெள்ளி கடற்கரை பணிகள் மேற்கொள்வதன் மூலம் உள்ளூர் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும், உள்ளூர் பொருளாதாரம் மேம்பாடு அடையவும், சுற்றுலா சார்ந்த தொழில்கள் மேம்படவும் வாய்ப்பு ஏற்படும்.
உள்ளூர் மக்கள் செலவின்றி தங்கள் பகுதியிலேயே குடும்பங்களுடன் சுற்றுலா மேற்கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி கமிஷனர் அனு, ஆர்.டி.ஓ., அபிநயா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.