/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'நடுவில் கொஞ்சம் கற்றலை தேடி' திட்டம் பு.முட்லுார் பள்ளியில் கலெக்டர் ஆய்வு

ADDED : ஜூலை 07, 2025 01:55 AM

பரங்கிப்பேட்டை,: பரங்கிப்பேட்டை அருகே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
'நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி' திட்டத்தின் கீழ், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் மற்றும் சி.முட்லுார் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடக்கும் சிறப்பு வகுப்புகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறுகையில், '6ம் வகுப்பு முதல், 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் இக்கல்வி ஆண்டில் 'நடுவில் கொஞ்சம் கற்றலைத் தேடி' என்ற சிறப்பு திட்டத்தை விரிவுபடுத்தி அனைத்து நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 520 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களில் அடிப்படை கல்வியை கற்று தருவதாகும்.
இத்திட்டத்தில் பயிற்சி வழங்க மாணவர்களை தேர்வு செய்ய அடிப்படை திறனறித் தேர்வு 41,723 மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. அதில் குறைந்த மதிப்பெண் பெற்ற 9,197 மாணவர்களுக்கு தனி வகுப்பறையில் சிறப்பு வகுப்புகள் பாடவாரியாக கால அட்டவணைப்படி 3 மாத காலம் நடக்கும்' என்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் ஞானசேகரன், தலைமை ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்டடோர் உடனிருந்தனர்.