/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'வாசிப்போம் உயர்வோம்' திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு
/
'வாசிப்போம் உயர்வோம்' திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு
'வாசிப்போம் உயர்வோம்' திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு
'வாசிப்போம் உயர்வோம்' திட்டம் கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 18, 2025 06:22 AM

கடலுார் : கடலுார் அடுத்த அன்னவல்லி ஊராட்சி யில் கிராம நுாலகங்களில் பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் 'வாசிப் போம் உயர்வோம்' திட்டத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் துவக்கி வைத்தார்.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளிடையே புத்தகம் வாசிக்கும் திறன் மேம்படுத்தும் வகையில் கிராமப் புற நுாலகங்கள் மூலம் 'வாசிப்போம் உயர்வோம்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் அரசு துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளியை சேர்ந்த 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டுள் ளனர்.
மா வட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 150 ஊராட்சிகளில் இத்திட்டத்தின் கீழ் 5,146 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில் 4,544 மாண வர்கள் பெற்றோர் அனுமதி பெற்று சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தையொட்டி கடலுார் ஊராட்சி ஒன்றியம் அன்னவள்ளி ஊராட்சியில், இத்திட்டத்தை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரியங்கா, பயிற்சி கலெக்டர் மாலதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஷபானா அஞ்சும் பங்கேற்றனர்.